மதுரை : மதுரையில் நேற்று காலை வெயில் மதியம் 3:00 மணிக்கு திடீர் மழை, 4:00 மணிக்கு மீண்டும் வெயில், அடுத்தது உருட்டி மிரட்டும் மழை என வித்தியாசமான தட்பவெப்பத்தை மக்கள் அனுபவித்தனர்.நேற்று மதியம் 3:00 மணிக்கு சில பகுதிகளில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்த சில நிமிடங்கள் சட்டென மறைந்தது. மீண்டும் துாறலாய் தொடர்ந்து மழையாய் பெய்தது. அதன் பின் வெயில் அடித்ததால் மழையின் தடம் மறைந்த நிலையில் மீண்டும் தொடர்ந்தது.நேற்று முன்தினம் சராசரியாக 9.8 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக இடையபட்டியில் 57 மி.மீ., கள்ளந்திரி 28.5, வாடிப்பட்டி 22, சிட்டம்பட்டி 17.6, பெரியபட்டி 15.4, சோழவந்தான் 15, சாத்தையாறு அணை 8, விரகனுார் 7.4, தல்லாகுளம் 7, தனியாமங்கலம் 7, புலிப்பட்டி 5.4, திருமங்கலம் 5.2, மேட்டுப்பட்டி 4, மதுரை வடக்கு 3.6, மேலுார் 2 மி.மீ., மழை பெய்தது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 118.75 அடி, மொத்த உயரம் 152 அடி, நீர் இருப்பு 2403 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 201 கனஅடி, வெளியேற்றம் 300 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 47.80 அடி, மொத்த உயரம் 71 அடி, நீர் இருப்பு 1718 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 93 கனஅடி, வெளியேற்றம் 69 கனஅடி. சாத்தையாறு அணை நீர்ட்டம் 9.10 அடி, மொத்த உயரம் 29 அடி, நீர் இருப்பு 6.5 மில்லியன் கனஅடி.