| ADDED : மே 04, 2024 05:40 AM
மின்சாதனங்கள் பழுதுமதுரை தபால்தந்தி நகர், ஜெ.என்.நகர் பகுதிகளில் மின்னழுத்த பிரச்னை அதிகமாக உள்ளது. குறிப்பாக இரவில் மின்தடை ஏற்படுவதால் புழுக்கத்தில் வயதானவர்கள், குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர். மின் சாதனங்களும் அடிக்கடி பழுதாகின்றன. மின்வாரிய அதிகாரிகள் அதிக திறன் கொண்ட மின்மாற்றிகளையோ அல்லது கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முருகேசபாண்டியன், தபால்தந்தி நகர்.குடிநீரை வீணாக்கலாமாமதுரை யானைக்கல் வடக்குவெளி வீதி சந்திப்பில் கழிவுநீருடன் குடிநீர் கலந்து வீணாகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் வேளையில் இப்படி குடிநீரை வீணாக்கலாமா. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரகுவீர், வடக்குவெளி வீதிஆம்புலன்சுக்கு வழிவிடுங்கப்பா...வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு செல்ல கோர்ட் உத்தரவுப்படி ரோட்டில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டு ஆம்புலன்ஸ் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதால் ஆம்புலன்ஸ் செல்ல இடையூறு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கவுரிநாதன், தென்கரை.குளம் போல் தேங்கிய கழிவுநீர்மதுரை பைபாஸ் ரோடு குரு தியேட்டர் அருகில் குளம் போல் தேங்கிய கழிவுநீரால் கொசு உற்பத்தி பெருகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அம்சபாண்டி, ஆரப்பாளையம்.மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி நிரந்தர கட்டுமானங்கள் கட்டுவதால் அப்பகுதியிலுள்ள மரங்கள், பல்லுயிர்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் கட்டடங்களும் பாறைகளுமே மிஞ்சும். மாநகராட்சி சார்பில் அழிக்கப்படும் மரங்களுக்கு ஏற்ற எண்ணிக்கையில் புதிதாக மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.- இளமுருகன், திருப்பரங்குன்றம்.கழிவுநீர் தேக்கம்மதுரை புட்டுத் தோப்பு ஆசிரியர் காலனியில் ஒரு வாரமாக பாதாள சாக்கடை நிரம்பி ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மக்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட முடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சரிசெய்ய வேண்டும்.- சத்தியசீலன், புட்டுத்தோப்பு.