| ADDED : மே 11, 2024 05:51 AM
நோ பார்க்கிங் மீறல்மதுரை கீழவெளி வீதியில் நான்கு சக்கர வாகனங்களை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பலர் தினமும் விபத்தில் சிக்குகின்றனர். போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முரளி, கீழவெளி வீதி.ரோடு ஆக்கிரமிப்புகரடிப்பட்டி பாரதியார் நகர் 11வது தெருவில், சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோட்டில் கட்டட ஆக்கிரமிப்பு உள்ளது. பஞ்சாயத்து தலைவரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ரோடு குறுகலாக இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நந்தா, கரடிப்பட்டி.திருப்பரங்குன்றம் ரோடு பைக்காரா பெட்ரோல் பங்க் அருகே கட்டுமான பொருட்களால் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவபாலன், பைக்காராகால்வாய் ஆக்கிரமிப்புதிருநகர் 6வது நிறுத்தம் அருகில் அங்கயற்கண்ணி தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கட்டட கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து கழிவுகளை அகற்றி கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.- ராகவன், திருநகர்பிழையான பெயர்பலகைமதுரை எச்.எம்.எஸ்., காலனி பென்னர் நகர் 2வது தெருவில் புதிதாக பெயர் பலகை வைத்துள்ளனர். இதில் பென்னர் காலனி 2வது தெரு என தவறாக எழுதப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் திருத்தி எழுத வேண்டும்.- பிரசன்னா பாலாஜி, எச்.எம்.எஸ்.,காலனி