| ADDED : மே 31, 2024 05:26 AM
* நாய்கள் தொல்லைமதுரை எச்.எம்.எஸ்., காலனி, சிவானந்தா வைத்திய சாலை அருகே நாய்கள் கூட்டமாக சேர்ந்து வருவோர் போவோரைச் சூழ்ந்து உயிர் பயத்தை காட்டுகின்றன. நாய்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கவிதா, எச்.எம்.எஸ்., காலனி* பாம்புகள் நடமாட்டம்மதுரை சர்வேயர் காலனி மெயின் ரோடு அருகே காலி மனையில் பராமரிப்பு இல்லாமல் கருவேல மரங்கள் சூழ்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் வீடுகளை அடிக்கடி எட்டிப்பார்க்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் காலிமனை உரிமையாளர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குணா, சர்வேயர் காலனி.* பாதாள சாக்கடை அடைப்புமதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் 8 வது குறுக்குத் தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக வெளியேறி ரோடு முழுவதும் தேங்கியுள்ளது. தீவிர சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆனந்த மன்னர், பழங்காநத்தம்.* நடைபாதை ஆக்கிரமிப்புமதுரை வார்டு 47 ல் தெற்கு மாரட் வீதி இருபுறமும் நடைபாதையில் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் மேடும் பள்ளமுமாக உள்ள நடைபாதையை சரி செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.- அஷோக், தெற்குவாசல்.* மழைநீர் தேக்கம்மதுரை ஆனையூரில் கழிவுநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பால் மழைநீர் வடிய இடமின்றி காலி மனைகளில் 3 நாட்களாக தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்திப் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரேவதி, ஆனையூர். * அணையாத தெருவிளக்குமதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் தினமும் காலை 7:00 மணிக்கு மேலும் எரிந்து கொண்டிருக்கிறது. மின்சாரத்தை சேமிக்கும் எண்ணம் மின் ஊழியர்களுக்கு இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அப்துல் காதிர், தெப்பக்குளம்.