உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீரில் தத்தளிக்கும் தாலுகா அலுவலகம்

தண்ணீரில் தத்தளிக்கும் தாலுகா அலுவலகம்

மேலுார்: மேலுார் தாலுகா அலுவலக வளாகத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் உடைப்பால் பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.மேலுார் தாலுகா அலுவலகம் 1951 ல் கட்டப்பட்டதால் தற்போது அதே வளாகத்தினுள் ரூ.3.70 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. மின்கம்பத்திற்காக பள்ளம் தோண்டியபோது நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒரு லிட்டர் ரூ.16 க்கு விலைக்கு வாங்கும் தண்ணீர் வீணாகுவதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. தீயணைப்பு நிலையம் அருகே குளமாக தேங்கி கிடக்கிறது. அதனால் நீதிமன்றம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு தண்ணீரில் நீந்தி செல்கிறோம் என்றனர்.நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், ''உடனடியாக சரி செய்யப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ