| ADDED : ஜூன் 15, 2024 06:24 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் தனிச்சியம் பிரிவு இருளில் மூழ்கியுள்ளது.இப்பகுதியில் இருந்து கொண்டையம்பட்டி, அலங்காநல்லுார் வரை பல கிராமங்களுக்கும் மக்கள் சென்று வருகின்றனர். ஓராண்டுக்கு முன் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு, தற்போது 'பிளை ஓவர்' பாலப்பணிகள் நடந்து வருகிறது. 8 மாதங்களுக்கு முன் இங்கிருந்த உயர் கோபுர மின் விளக்கு அகற்றப்பட்டு சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ளது.மாற்று ஏற்பாடுகள் செய்யாததால் மின் விளக்கு இல்லாமல் அச்சத்துடன் பயணிகள் காத்திருக்கின்றனர். பஸ்களில் இருந்து இறங்கி செல்வோர், டூ வீலரில் செல்வோர் விபத்தில் சிக்கவும், குற்றம் நடக்கவும் வாய்ப்புள்ளது. தனிச்சியம் ஊராட்சி நிர்வாகம் மின் விளக்கு, தற்காலிக பஸ் ஸ்டாப் அமைக்க முன் வர வேண்டும்.