உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆடி பவுர்ணமி பூஜை

ஆடி பவுர்ணமி பூஜை

திருப்பரங்குன்றம்: ஆடி பவுர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.எஸ்.ஆர்.வி. நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் யாக பூஜை முடிந்து மூலவர்களுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மலைக்குப் பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நகரத்தார் பாதயாத்திரையாக பால்குடம், காவடி எடுத்து சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தனர். அவர்கள் சார்பில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ