உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புகையிலை எதிர்ப்பு தினம்

புகையிலை எதிர்ப்பு தினம்

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ராஜயோகினி சீனியர் ஆசிரியர் செந்தாமரை தலைமை வகித்தார். ரயில்வே மருத்துவமனை டாக்டர்கள் பாஸ்கரன், சுப்புலெட்சுமி, ஜெயஸ்ரீ, சாந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., கண்ணன் விழிப்புணர்வு நடைபயணத்தை துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் துறை ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ