உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குருவித்துறையில் அபாய சமுதாயக்கூடம்

குருவித்துறையில் அபாய சமுதாயக்கூடம்

சோழவந்தான்: வாடிப்பட்டி ஒன்றியம் குருவித்துறையில் சமுதாயக்கூடம் பராமரிப்பின்றி சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இங்குள்ள சமுதாயக் கூடம் 2006----10ம் ஆண்டில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.பல லட்சம் மதிப்பில் 2 தளங்களுடன் கட்டப்பட்டது. கீழ்தளத்தில் நிகழ்ச்சிகளுக்கான அரங்கம், மாடியில் உணவுக் கூடம் உள்ளது. தண்ணீர் தொட்டியில் இருந்து கசியும் தண்ணீர், உணவுக் கூடத்தின் ஒரு பகுதியில் ஒழுகுகிறது.மாடியிலிருந்து வெளியேற்றப்படும் எச்சில் இலைகள் சமுதாய கூடத்தின் அருகே விழும் இடத்தில் பள்ளம் வெட்டி வைத்துள்ளனர். இக்கழிவுகள் பல மாதங்களாக அகற்றப்படவில்லை. இங்குள்ள கோயில் மண்டகப்படி திடல் பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுகிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கிறது.இக்கூடத்தின் சுற்றுச்சுவர் கேட் பகுதியில் விரிசலுடன் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. அந்தச் சுவருக்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றுகின்றனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி