கொலை முயற்சி: 5 ஆண்டு சிறை
உசிலம்பட்டி : செக்கானுாரணி அருகே புளியங்குளத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது சித்தப்பா மகன் பாலமுருகனுடன் இடத்தகராறு இருந்தது. 2011ல் கண்ணனை, பாலமுருகன் கத்தியால் குத்தினார். இவ்வழக்கின் விசாரணை உசிலம்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி ரஷ்கின்ராஜ் முன்னிலையில் நடந்தது. அரசு வழக்கறிஞர் ராஜசேகர் ஆஜரானார். பாலமுருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.