விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்ட்ரா கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம், வணிகவியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பட்டய கணக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சிவகுமார் வரவேற்றார்.பட்டய கணக்காளர்கள் சதிஷ்குமார், தவமணி பேசினர். பேராசிரியர்கள் ஞானேஷ்வரன், மேகலா, விஷ்ணுபிரியா, சுகந்தி, பொன்ராஜ், ராம்பிரசாத், கார்த்திக், தங்கபாண்டி முருகன், விஜயலட்சுமி பங்கேற்றனர். வணிகவியல் துறை தலைவர் துரைசாமி நன்றி கூறினார்.