மேலும் செய்திகள்
மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஊர்வலம்
26-Jan-2025
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தின் துாய்மை நகருக்கான மக்கள் இயக்கம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சுகாதாரப் பணியாளர்கள் குப்பையில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.தொடர்ந்து நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியின் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்க மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நகராட்சி தலைவர் சகுந்தலா, கமிஷனர் சக்திவேல், ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
26-Jan-2025