உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுற்றுலா மோசடி வழக்கில் பெண்ணிற்கு ஜாமின்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா மோசடி வழக்கில் பெண்ணிற்கு ஜாமின்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சுற்றுலா (டூர் பேக்கேஜ்) ஏற்பாடு செய்வதாக வாடிக்கையாளர்களிடம் உறுதியளித்து ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 971 வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த தீபிகா உட்பட சிலர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான தீபிகா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி அப்துல் குத்துாஸ் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: மனுதாரர் சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர். அவர் எவ்வித சம்பவத்திலும் ஈடுபடவில்லை.அரசு தரப்பு: குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து தொகை வசூலிக்கப்படவில்லை. ஜாமின் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். மறு உத்தரவு வரும்வரை தினமும் கொடைக்கானல் போலீசில் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை