உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூடைபந்து போட்டி

கூடைபந்து போட்டி

மதுரை, : தேசிய விளையாட்டு தினவிழாவை முன்னிட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான கூடைபந்து போட்டிகள் நடந்தன. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, கூடைபந்து கழக செயலாளர் வசந்தவேல், இணைச் செயலாளர் மணிகண்டன், முன்னாள் முதுநிலை மேலாளர் முருகன், விடுதி மேலாளர் பிரபு துவக்கி வைத்தனர்.மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா கல்லுாரி 18 - 9 புள்ளிகளில் தியாகராஜர் கல்லுாரியை வீழ்த்தியது. மாணவிகளுக்கான இறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி பி அணி 8 - 7 புள்ளிகளில் லேடிடோக் ஏ அணியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை