உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ., சிறப்பு வழிபாடு

பா.ஜ., சிறப்பு வழிபாடு

மதுரை: பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்றதையொட்டி, மதுரையில் பா.ஜ., சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் சார்பில் சிறப்பு விசேஷ பூஜை, அர்ச்சனை நடந்தது.லோக்சபா தேர்தலில் தெற்கு சட்டசபை தொகுதியில் 8 வார்டுகளில் பா.ஜ., முதலிடம் பெற்றது. எனவே, ஆதரவு தெரிவித்த சவுராஷ்டிரா சமுதாயத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கிருஷ்ணாபுரம் காலனி, வண்டியூர், சக்குடி சவுராஷ்டிராபுரம், கடச்சனேந்தல் பகுதிகளில் தேர்தல் பணியாற்றிய சமுதாய பிரமுகர்களை சந்தித்து நன்றி கூறினார். கோயில் சார்பில் குழந்தைகளுக்காக நடைபெறும் மதிய உணவு திட்டத்திற்கு நிதி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இ.ஆர்.குமரேசன், கே.கே.ஜி.பிரபாகரன், ஆர்.பி.ஆர்.ராமசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ