வாக்கிங் செல்வோருக்கு ரத்தக்காயம் இலவசம்
திருப்பரங்குன்றம் : திருநகர் அண்ணா பூங்கா நடைமேடையை ஒட்டியுள்ள பள்ளங்களில் விழுந்து ஏராளமானோர் காயம் அடைகின்றனர். திருநகரின் மையப் பகுதியில் உள்ள பூங்காவை சுற்றி வெளிப்பகுதியில் அமைக்கப்பட்ட நடைமேடையில் தினமும் காலை, மாலையில் 500க்கும் மேற்பட்டோர் நடைப் பயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த நடைமேடை 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைப்பின்றி சேதமடைந்துள்ளது. இதில் நடைபயிற்சி மேற்கொள்வோர் சிரமம் அடைகின்றனர். பலர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். 20 நாட்களுக்கு முன்பாக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டினர். அந்தப் பள்ளம் முழுமையாக மூடப்படாமல் மேடையை ஒட்டி ஒரு அடி பள்ளம் உள்ளது. அதிகாலையில் நடைமேடையில் வாக்கிங் செல்வோர், ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள், அந்த பள்ளத்தால் தடுமாறி விழுந்து ரத்தக் காயமடைகின்றனர். நடைமேடையை முழுமையாக சீரமைக்கவும், குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை விரைவாக சீரமைக்க நடவடிக்கை தேவை.