குண்டு வீச்சு ஒருவர் கைது
மேலுார்: எஸ். கல்லம்பட்டி ஜாகிர் உசேன் 45, இவரது சகோதரர் காதர். இருவருக்கும் சொத்து சம்பந்தமான முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஜாகிர் உசேன் வீட்டுக்கு இரவு 11:00 மணிக்கு வந்த காதர் மகன் ஷாஜகான் 25, பெட்ரோல் நிரப்பிய பீர்பாட்டிலை வீட்டுச் சுவரில் வீசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஷாஜகானை மேலுார் போலீசார் கைது செய்தனர்.