உள்ளூர் செய்திகள்

விளக்க கூட்டம்

உசிலம்பட்டி, ஜூன் 19- -உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன் சி.ஐ.டி.யூ., அமைப்பினர், 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். இதற்காக ஜூன் 24ல் நடக்கும் உண்ணாவிரதம் குறித்த விளக்கக் கூட்டம் நடந்தது. கிளைத் தலைவர் ராஜா, மண்டல பொருளாளர் மாரியப்பன், மத்திய சங்க துணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் ரவிக்குமார், குமார், ஆசைக்கொடி, பாலகிருஷ்ணன், சிவக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை