உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காலையில் வாட்டுது மாலையில் கொட்டுது

காலையில் வாட்டுது மாலையில் கொட்டுது

பேரையூர், : பேரையூர் பகுதியில் காலை தொடங்கி மதியம் வரை வெயில் வாட்டும் நிலையில் மாலையில் ஆங்காங்கே கோடை மழை பெய்கிறது.கடந்த ஒரு வாரமாக காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வதைக்கிறது. மாலையில் மழை பெய்து இதமாக்குகிறது. ஆங்காங்கே மழை பெய்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேரையூரில் 67 மி.மீ., மழை பதிவானது. தாழ்வான விவசாய நிலங்களில் நீர் தேங்கியது.தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளம், குட்டை, கண்மாய்களுக்கு நீர் வரத் துவங்கியுள்ளது. கிணறுகளில் நீர் ஊற்றெடுக்க துவங்க உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை