உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புதர் மண்டிக்கிடக்கும் கலெக்டர் அலுவலக வளாகம்

புதர் மண்டிக்கிடக்கும் கலெக்டர் அலுவலக வளாகம்

மதுரை : மதுரை கலெக்டர் அலுவலக பழைய கட்டடம் உள்ள பகுதியில் மண்டிக் கிடக்கும் புதர்களை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டதால் 3 ஆண்டுகளாக பழைய கட்டடம் கண்டு கொள்ளப்படாமல் இருந்தது. பல துறைகள் புதிய கட்டடத்திற்கு சென்றதால் இவ்வளாகத்தில் அலுவலர்கள், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. இக்கட்டடம் உள்ள பகுதியில் சேதமடைந்த பர்னிச்சர்கள், கட்டுமான இடிபாடுகள் கொட்டப்பட்டும், குப்பை கூளமாகவும் உள்ளது. கட்டடத்தின் பின்புறம் செடி, கொடிகள் மண்டி பாம்புகள், விஷ ஜந்துகளின் புகலிடமாக விளங்குகிறது.தற்போது பழைய கட்டடத்திற்கு வருவாய்த் துறையின் சில பிரிவுகள் புதிய கட்டடத்தில் இருந்து மீண்டும் இங்கு வந்துள்ளன. கலெக்டர், டி.ஆர்.ஓ., கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறைகளும் புதுப்பிக்கப்பட்டு, அவர்கள் இந்த கட்டடத்தில் இருந்து செயல்பட உள்ளனர்.எனவே, பழைய கட்டடத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்து புதுப்பொலிவு பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்கள், அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ