| ADDED : ஆக 04, 2024 04:41 AM
மதுரை: மதுரையில் சரக்கு ரயில்களுக்கான நெரிசலை தவிர்க்க பைபாஸ் வழித்தடம் அமைக்க வேண்டும் என வெங்கடேசன் எம்.பி., கூறினார்.அவர் கூறியதாவது: மத்திய பட்ஜெட் கூட்டம் நடக்கிறது. தமிழ்நாடு, மதுரை எய்ம்ஸ் பற்றி குரல்கொடுத்தோம். இதற்கு நிதி ஒதுக்காதது டெண்டர் வைப்பதில் தொழில்நுட்ப பிரச்னை உள்ளது என்கிறார். ரயில்வே துறையில் மதுரை தொடர்பான 3 முக்கிய பிரச்னையை தெரிவித்துள்ளோம்.சென்னையில் தாம்பரம், ராயபுரம் ஸ்டேஷன்கள் விரிவாக்கம் செய்வது போல, மதுரையில் கூடல்நகர் ஸ்டேஷனை புதிய முனையமாக விரிவாக்கம் செய்ய வேண்டும். மதுரை ஸ்டேஷனில் உள்ள நெரிசலை தவிர்க்க, சரக்கு ரயில்களுக்கென சோழவந்தானில் இருந்து செக்கானுாரணி வழியாக சிவரக்கோட்டை வரை பைபாஸ் ரோடு' அவசியம். மதுரை = கோவை, மதுரை = கொல்லத்திற்கு பகல் நேர ரயில் வேண்டும். மதுரையில் இருந்து தேனி, ராமேஸ்வரம் நகரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் சண்டிங் சர்வீஸ்' விட வேண்டும்.மதுரை அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்கு சர்வே செய்த வழித்தடத்திற்கு நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும். மதுரையில் இருந்து மேலுார் வழியாக காரைக்குடிககு வழித்தடம் அமைக்க சர்வே செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.