உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன் பதிவில்லா ரயில் டிக்கெட் விற்கும் வேலைக்கு அழைப்பு

முன் பதிவில்லா ரயில் டிக்கெட் விற்கும் வேலைக்கு அழைப்பு

மதுரை:முன்பதிவில்லா ரயில் டிக்கெட் விற்க உதவியாளர்களாக விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத டிக்கெட், அலுவலகங்கள், தானியங்கி இயந்திரங்கள், மொபைல் போன் செயலிகள் வாயிலாக வழங்கப்படுகின்றன. தானியங்கி இயந்திரங்கள் மூலம் டிக்கெட்டுக்கள் வழங்க உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதுவரை இந்த உதவியாளர்களாக ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.தற்போது ஆர்வமுள்ள அனைவரும் ரயில் டிக்கெட் விற்க தானியங்கி இயந்திரங்களில் உதவியாளர்களாக பணியாற்ற வாய்ப்பு தர ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. விற்கப்பட்ட மொத்த டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் கமிஷனாக வழங்கப்படும்.இந்த உதவியாளர்கள் ஓராண்டுக்கு பணியில் இருப்பர். திண்டுக்கல், பழனி, காரைக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், மானாமதுரை, கல்லிடைக்குறிச்சி, கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், புதுக்கோட்டை, சாத்துார், செங்கோட்டை, மதுரை, திருச்செந்துார், துாத்துக்குடி, போடிநாயக்கனுார் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள தானியங்கி இயந்திரங்களில் டிக்கெட் விற்க உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம், மேல் விவரங்கள் https://sr.indianrailways.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூன் 11 என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !