என்.எஸ்.எஸ்., முகாம்
மதுரை: மதுரை சி.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் எல்.கே.டி., நகரில் துவங்கியது. திட்ட அலுவலர் கோகிலா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ராமலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாகுல் ஹமீது, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.