உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை

மதுரை : நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தேவையில்லை. அது பல குளறுபடிகளை உருவாக்கும் என்பதால் அதை கைவிட வேண்டும் என அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளர் மகா ராமகிருஷ்ணன் கூறினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும். ஆதிக்க சக்திகள் குளறுபடியை ஏற்படுத்தவும், பட்டியலின மக்களின் வாழ்வாதாரம் பின்னோக்கிச் செல்லவும் வழிவகுக்கும். 2010ல் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு 2012ல் உச்சநீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்.அனைத்து மாவட்டங்களில் உள்ள பஞ்சமி நிலங்களை தமிழக அரசு மீட்க வேண்டும். பள்ளி கல்லுாரிகளில் படிக்கும் பட்டியலின மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை அரசு உடனே வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை