உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலம்பட்டியில் குறுவட்ட செஸ், கேரம் போட்டிகள்

உசிலம்பட்டியில் குறுவட்ட செஸ், கேரம் போட்டிகள்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட செஸ் போட்டிகள் நடந்தன. தலைமை ஆசிரியர் பரமசிவம் துவக்கி வைத்தார்.

மகளிர் பிரிவு

11 வயது பிரிவில் டி.செட்டியபட்டி ஊராட்சி பள்ளி மாணவி அம்ரிதா, 14 வயது பிரிவில் கேரன் பள்ளி மாணவி கிரிசன்யா, 17 வயது பிரிவில் உசிலம்பட்டி டி.இ.எல்.சி., பள்ளி மாணவி நவீனா, 19 வயது பிரிவில் மாணவி அபிலயா முதலிடம் பெற்றனர்.

ஆடவர் பிரிவு

11 வயது பிரிவில் டி.செட்டியபட்டி ஊராட்சி பள்ளி ஜீவாஸ்ரீதரன், 14 வயது பிரிவில் ஜெய்சந்தன், 17 வயது பிரிவில்தொட்டப்பநாயக்கனுார்அரசு பள்ளி ராகுல்கிருஷ்ணா, 19 வயது பிரிவில் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கருப்பசாமி முதலிடம் பெற்றனர்.செல்லம்பட்டி வட்டார பள்ளிகளுக்கிடையே நடந்த பெண்கள்14 வயது பிரிவில் கருமாத்துார் கிளாரட் பள்ளி பிரியதர்ஷினி, 17 வயது பிரிவில் பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி ரம்யா, 19 வயது பிரிவில் தும்மக்குண்டு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மகேஸ்வரி முதலிடம் பெற்றனர்.ஆடவர் 14 வயது பிரிவில் கருமாத்துார் கிளாரட் பள்ளி வனித், 17 வயது பிரிவில் தும்மக்குண்டு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி ஆதித்யா, 19 வயது பிரிவில் கருமாத்துார் கிளாரட் பள்ளி மாணவர் ஆரியா முதலிடம் பெற்றனர்.கேரம் பெண்கள் ஒற்றையர், 14 வயதினர் பிரிவில் உசிலம்பட்டி டி.இ.எல்.சி., பள்ளியினரும், 17 வயது பிரிவில் உசிலம்பட்டி ஆர்.சி., பள்ளியினரும், 19 வயது பிரிவில் பூச்சிபட்டி அரசு கள்ளர் பள்ளி அணியினரும் வெற்றி பெற்றனர். இரட்டையர் பிரிவில் 14, 17, 19 மூன்று வயது பிரிவுகளிலும் உசிலம்பட்டி டி.இ.எல்.சி., அணியினர் வெற்றி பெற்றனர். ஆடவர் ஒற்றையர் 14 வயது பிரிவில் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளி, 17,19 வயது பிரிவுகளில் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியினரும் வெற்றி பெற்றனர்.இரட்டையர் 14, 17 வயது பிரிவுகளில் தொட்டப்பநாயக்கனுார்அரசு உயர்நிலைப்பள்ளி, 19 வயது பிரிவில் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளி அணியினரும் வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை