உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வரித்துறை கூட்டுறவு சங்க நுாற்றாண்டு துவக்க விழா

வரித்துறை கூட்டுறவு சங்க நுாற்றாண்டு துவக்க விழா

மதுரை : மதுரை பீபிகுளம் வருமான வரித்துறை அலுவலகத்தில், கூட்டுறவு சங்க நுாற்றாண்டு துவக்க விழா நேற்று நடந்தது.விழாவில் துணைத் தலைவர் மஞ்சுளா வரவேற்றார். வரித்துறை கெஜட்டட் ஆபீசர்ஸ் சங்க கிளை செயலாளர் உதயசேகர், வரித்துறை ஊழியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு, புதுச்சேரி சர்க்கிள் தலைவர் ஷியாம்நாத் பேசினர். வரித்துறையின் தலைமை கமிஷனர் சஞ்சய்ராய் பேசுகையில், ''ஒற்றுமையே பலம். இச்சங்கம் அனைவரின் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. இது மும்பை சங்கம் போல பழமையானது. சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ, உயிர் காக்கும் காப்பீடு திட்டம் செயல்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர். நாளொன்றுக்கு ஒருவருக்கு ரூ.3 வீதம் செலுத்தினால் ரூ.5 லட்சம் வரை பெறும் வகையிலான காப்பீடு திட்டத்தை செயல்படுத்தலாம்'' என்றார்.விழாவிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் முத்துசரவணன் பேசுகையில், ''இந்த சங்கத்தை நுாறாண்டுகளுக்கு முன் ஒரு ஆங்கிலோ இந்தியன் துவக்கினார். துவக்கத்தில் ரூ. 2 முதல் கடன் வழங்கி, இன்று ரூ.24 லட்சம் கடன் வழங்கும் நிலைக்கு சங்கத்தை கட்டமைத்துஉள்ளனர். தொழில்நுட்பம் வந்த பின்பு, ஆன்லைனில்கடனை ஒரே நாளில் வழங்கும் நிலை உள்ளது'' என்றார்.சங்க செயலாளர் குணவதி, முதன்மை செயல் அலுவலர் அசோக்குமார், பொருளாளர் ஜெயகண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை