உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வர் ஸ்டாலின் கடமை தவறிவிட்டார்: சொல்கிறார் த.மா.கா., தலைவர் வாசன்

முதல்வர் ஸ்டாலின் கடமை தவறிவிட்டார்: சொல்கிறார் த.மா.கா., தலைவர் வாசன்

மதுரை : பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நொண்டி சாக்கு காரணம் கூறி புறக்கணித்ததன் மூலம் கடமை தவறிவிட்டார், என த.மா.கா., தலைவர் வாசன் குற்றம்சாட்டினார்.மதுரையில் அவர் கூறியதாவது:மாநிலங்கள் வளர்ச்சிக்காக நடத்தப்படுவது நிடி ஆயோக் கூட்டம். முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் எவ்வித அரசியலும் இருக்காது. நீண்ட இடைவெளிக்கு பின் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தால் மரியாதையாக இருந்திருக்கும். ஆனால் நொண்டிச் சாக்கு கூறி புறக்கணித்ததன் மூலம் தனது கடமையை தவறிவிட்டார்.அக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என ஊடகங்கள், கடிதமும் மூலம் தெரிவிக்கும் முதல்வர், அதில் பங்கேற்று கேள்வி எழுப்பி விவாதித்திருக்கலாம் என்பதே அவரைத் தேர்வு செய்த மக்களின் எண்ணம். அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக புறக்கணித்து அரசியல் செய்துள்ளார்.தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு வழக்கமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களுக்கும் அதிக நிதி கொடுக்க வேண்டுமென்றால் பட்ஜெட் போதாது. எய்ம்ஸ், மெட்ரோ ரயில்வே திட்டங்கள் உட்பட தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்.மத்திய அரசு ஒதுக்கிய நிதிக்கு தமிழகத்தில் எவ்வித வெளிப்படை தன்மையும் இல்லை. அனைத்து துறைக்கும் சமமாகவே நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பா.ஜ., கூட்டணி தோல்வியுற்றாலும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடந்து கொள்ளவில்லை. இவ்வாறு கூறினார். அவரது தனிச்செயலாளர் சிவராமன், மூத்த நிர்வாகி சித்தன், மதுரை நகர் தலைவர் ராஜாங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை