உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷன் ஜோராகுது

சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷன் ஜோராகுது

மதுரை; சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷன் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.6.54 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. டிஜிட்டல் அறிவிப்பு பலகை பொருத்தப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 'திவ்யங்ஜன்' திட்டத்தின் அடிப்படையில் தனி புக்கிங் சென்டர், சாய்வுதள வசதிகள் அமைக்கப்படவுள்ளன.ஸ்டேஷனுக்கு செல்லும் பாதையில் 120 மீ., க்கு சீரமைக்கப்பட்ட ரோடு வசதி, பார்க்கிங் வசதிகளை மேம்படுத்துதல், நடைமேடை 1, 2ல் லிப்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஸ்டேஷனை சுற்றி 400 மீ.,க்கு தடுப்புச் சுவர் கட்டப்பட உள்ளது.இப்பணிகள் நடந்து வருவதால் பிரதான நுழைவாயில் தடை செய்யப்பட்டு புக்கிங் அலுவலகம் வழியாக பயணிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர கூடுதல் கழிப்பறைகள், நடைமேடை கூரை சீரமைப்பு, காத்திருப்பு அறைகளை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ