| ADDED : மே 07, 2024 05:38 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் 15 பள்ளிகளை சேர்ந்த 2067 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதியதில் 1897 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 91.78. இதில் நாவலர் சோமசுந்தர பாரதியார், கம்பர் மாநகராட்சி பள்ளிகள் 'சென்டம்' தேர்ச்சி பெற்றன.அதிகபட்சமாக ஈ.வெ.ரா. நாகம்மையார் பள்ளி மாணவி சரண்யா 580, வெள்ளி வீதியார் பள்ளி மாணவி வர்ஷினி 579, சுந்தரராஜபுரம் பள்ளி ஹரிணி ஸ்ரீதேவி 577 மதிப்பெண்களும் பெற்றனர். சென்றாண்டை விட தேர்ச்சி குறைந்த பொன்முடியார், திரு.வி.க., மாசாத்தியார், சேதுபதி பாண்டித்துரை உள்ளிட்ட மாநகராட்சி பள்ளிகளுக்கு தேர்ச்சி குறைவுக்கான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள், சென்டம் வென்ற பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களை கமிஷனர் தினேஷ்குமார், மாநகராட்சி கல்வி அலுவலர் ரகுபதி பாராட்டினர்.