| ADDED : ஜூலை 26, 2024 10:37 PM
மதுரை:‛‛இந்திய கிரிக்கெட்டில் வீரர்களிடம் ஏற்றத்தாழ்வு இல்லை. போதுமான வாய்ப்பு கிடைக்கிறது,'' என மதுரை வந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான வாய்ப்பு அளிக்கிறது. காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. கிரிக்கெட்டில் அரசியல் இல்லை. கிரிக்கெட் வாரியம் வீரர்களிடம் எந்தவொரு ஏற்ற தாழ்வுகளையும் பார்ப்பதில்லை. கிரிக்கெட் வாரியம், சக வீரர்களின் ஒத்துழைப்பால் தான் நான் இந்திய கிரிக்கெட் அணியில் வீரராக உருவாகி உள்ளேன்.ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் பங்கேற்று சிறப்பாக விளையாடினேன். ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ரசிகர்கள் அதிகம் பார்க்கும் கிரிக்கெட் போட்டியாக டி.என்.பி.எல்., போட்டி மாறி உள்ளது. டி.என்.பி.எல்., போட்டியால் தமிழகத்தில் இருந்து 15 கிரிக்கெட் வீரர்கள் உருவாகி உள்ளனர். இதில், கிராமப்புற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தொடக்கத்தை விட தற்போது கிரிக்கெட் முன்னேற்றம் அடைந்துள்ளது. நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.