உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அறுந்த மின்கம்பி: சிறுமி காயம்

அறுந்த மின்கம்பி: சிறுமி காயம்

மேலுார்: உடன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் 41, ஆடு மேய்க்கும் தொழிலாளி. நேற்று மதியம் மகள் சிவகாமியுடன் 6, ஆடு மேய்க்கச் சென்றார். செல்லும் வழியில் திடீரென மின் கம்பி அறுந்து ஆடு மீது விழுந்தது.மின்சாரம் தாக்கியதில் ஆடு துடிதுடித்தது. ஆட்டை காப்பாற்ற முயன்ற சிவகாமியையும் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார். கீழவளவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மின்வாரியத்துறையினர் மின்கம்பிகளை பராமரிப்பு செய்யாததே பாதிப்புக்கு காரணம் என்பதால் இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ