உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனைவிக்கு அரிவாள் வெட்டு

மனைவிக்கு அரிவாள் வெட்டு

உசிலம்பட்டி, : கவண்டன்பட்டி அங்கன்வாடி பணியாளர் ஐஸ்வர்யா 34. இவருக்கு 12 வயதில் மகள் உள்ள நிலையில் முதல் கணவர் இறந்ததால் கருமாத்துார் மொட்டைநாயக்கன்பட்டி கார்த்திக்கை மறுதிருமணம் செய்தார்.இவர்களுக்கு 2 வயது மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு கவண்டன்பட்டி வீட்டிற்குச் சென்று அரிவாளால் மனைவியின் கழுத்தில் வெட்டி விட்டு கார்த்திக் தப்பினார். ஐஸ்வர்யா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ