மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
31-Jul-2024
மதுரை: மதுரை தினமலர் நாளிதழ் சார்பில் கண் நலம், மனநலம் காக்கும் வகையில் அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்குமான விழிப்புணர்வு கருத்தரங்கு செப்.,1 காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடக்கிறது.பள்ளிக்குழந்தைகளின் கண்களை கவனமாக பாதுகாப்பது குறித்து மதுரை ஸ்ரீராம்சந்திரா கண் மருத்துவமனை டாக்டர் சீனிவாசன் விளக்குகிறார். தனித்திறன்களை வளர்த்து படிப்பில் சாதிப்பது குறித்து மதுரை இ.எஸ்.ஐ., மருத்துவமனை மனநல நிபுணர் டாக்டர் சிவசங்கரி பேசுகிறார். தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது குறித்து மதுரை சமூக அறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் கண்ணன் பேசுகிறார். அனுமதி இலவசம்.
31-Jul-2024