உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் தி.மு.க.,--பா.ஜ., போஸ்டர் போர்

மதுரையில் தி.மு.க.,--பா.ஜ., போஸ்டர் போர்

மதுரை: 'தி.மு.க.,வினரின் 'கெட் அவுட் மோடி'க்கு பதிலடியாக பா.ஜ.,வினர் 'கெட் அவுட் ஸ்டாலின்' என்று ஹேஷ்டாக்கை டிரெண்டாக்கியதுடன், மதுரையில் போஸ்டர் போரை நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு கல்விநிதி அளிக்கவில்லை என்றால், தமிழக மக்கள் 'கெட் அவுட் மோடி' என்று கூறும் நிலை வரும் என்று சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி கூறினார். உடனே தி.மு.க.,வினர் இதனை 'ஹேஷ்டாக்'காக டிரெண்ட் செய்தனர். நேற்று முன்தினம் 3 லட்சத்து 75 ஆயிரம்ஹேஷ்டாக்கை கடந்து இந்திய அளவில் முதலிடத்தில் இருந்ததாக தி.மு.க.,வினர் பெருமிதம் கொண்டனர்.இதனை முறியடிக்க பா.ஜ.,வினரும் களமிறங்கினர். உதயநிதிக்கு சவால் விட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'கெட் அவுட் ஸ்டாலின்' என்ற ஹேஷ்டாக்கை டிரெண்டாக்க திட்டமிட்டார். நேற்று காலை தனது முகநுால் பதிவில் 'கெட் அவுட் ஸ்டாலின்' என வெளியிட்டார். இதையடுத்து பா.ஜ.,வின் ஐ.டி.,விங் அதிரடியாக களமிறங்கி அதனை டிரெண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. மாலை 5:00 மணிக்குள் பத்து லட்சம் பார்வையை கடந்து டிரெண்டானது. பா.ஜ., ஐ.டி., பிரிவு பார்வையாளர் அர்ஜூனமூர்த்தி, மாநில தலைவர் பாலாஜி, செயலாளர்கள் ஆர்.விஷ்ணுபிரசாத், செந்தில்குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.மதுரையில் 'கெட் அவுட் ஸ்டாலின்' என பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டினர். போலீசார் அவற்றை அகற்ற உடனே களமிறங்கினர். பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''பா.ஜ.,வினர் ஹேஷ்டாக்கை ஊடகங்களில் டிரெண்டாக்கும்படி மாநில தலைவர் கூறினார். ஆர்வமான மதுரை தொண்டர்கள் போஸ்டரும் ஒட்டிவிட்டனர்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை