உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முள்ளிப்பள்ளத்தில் அள்ளி கொட்டுகின்றனரா கழிவுகளை

முள்ளிப்பள்ளத்தில் அள்ளி கொட்டுகின்றனரா கழிவுகளை

சோழவந்தான் : வாடிப்பட்டி ஒன்றியம் தென்கரை, முள்ளிப்பள்ளம் ஊராட்சி ரோட்டில் குவியும் குப்பை, இறைச்சிக் கழிவுகளால் சுகாதார கேடு நிலவுகிறது.இங்குள்ள தியேட்டர் அருகே தென்கரை கண்மாய் பாசன உபரி நீர் வாய்க்கால் வழியாக நிலையூர் கால்வாய்க்கு செல்கிறது. இந்த வாய்க்கால் கழிவுநீர் ஓடையாக மாறியுள்ளது. தென்கரை மற்றும் முள்ளிபள்ளம் ஊராட்சி எல்லை பகுதியில் அமைந்துள்ள கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது.ரோட்டோரம் பாலிதீன் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகின்றன. இதனால் தற்போதைய வெப்பச் சூழலில் காற்று மாசு அதிகரிக்கிறது. இறைச்சிக் கழிவுகளை உண்ணும் நாய்களுக்கு உடல் பாதிப்பு மற்றும் அந்நாய்களுக்குள் ஏற்படும் சண்டையால் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து ஏற்படுகிறது. இங்கு குப்பை கொட்டுவதை தவிர்க்க இரு ஊராட்சியும், கால்வாயை சுத்தம் செய்து, நிலங்களில் தேங்கியுள்ள பாலிதீன் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ