உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளையாட்டுத்தனமா இருக்காதீங்க... விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்க...

விளையாட்டுத்தனமா இருக்காதீங்க... விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்க...

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் டென்னிஸ், கூடைபந்து அரங்குக்கான சிந்தடிக் தரைத்தளம் சேதமடைந்தும் பீச் வாலிபால் அரங்கு பராமரிப்பின்றியும் உள்ளது.15 ஆண்டுகளுக்கு முன் டென்னிஸ், கூடைபந்து தலா இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டு சிந்தடிக் தரைத்தளம் அமைக்கப்பட்டது. லேசான மெத்தை போன்ற தளமாக இருப்பதால் இந்த தளத்தில் வீரர்கள் குதிக்கும் போதும், ஓடும் போதும் கால்கள் வலிக்காது. நீண்ட நேரம் பயிற்சி பெறவோ, போட்டியில் விளையாடவோ முடியும். பத்தாண்டுகளை கடந்தாலே தளம் காலாவதியாகி விடும் நிலையில் 15 ஆண்டுகளை கடந்தும் சீரமைக்கவில்லை. தரைத்தளம் ஆங்காங்கே பிளந்து காணப்படுவதால் ஓடி விளையாடும் போதும், பயிற்சி பெறும் போதும் தடுமாறி விழ வாய்ப்புள்ளது. மேலும் பிளவுபட்ட தளத்திற்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால் விளையாடுவதற்கு இடைஞ்சலாக உள்ளது.

பெயருக்கு பீச் வாலிபால்

போட்டி நடத்த வேண்டும் என்பதற்காக பெயருக்கு பீச் வாலிபால் ஒற்றை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் விளையாடும் இந்த போட்டி பள்ளிக்கல்வித்துறை மூலம் பள்ளி அளவிலும் போட்டியாக நடத்தப்படுகிறது. மதுரையில் ஒரு தனியார் பள்ளி தவிர வேறெங்கும் பீச் வாலிபால் அரங்கு இல்லை. தரையில் செங்கல்லை வைத்து தடுத்து அதற்குள் மணலை நிரப்பி மாணவர்கள் விளையாடுகின்றனர்.ஒவ்வொரு முறையும் குதித்து பந்தை அடிக்கும் போது மணல் துள்ளி வெளியேறுகிறது. 14, 17, 19 வயது மகளிர், ஆடவர் போட்டிக்கு இந்த ஒரு அரங்கில் வாரக்கணக்கில் போட்டி நடத்தப்படுகிறது. அருகிலுள்ள இடத்தில் இன்னொரு அரங்கு அமைத்து தடுப்புச்சுவர் எழுப்பி முழுமையாக மணலை நிரப்பினால் போட்டிகள் நடத்த வேண்டிய நாட்கள் குறையும். மாலையிலும் விளையாடும் வகையில் மின்னொளிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியின் வாலிபால், கூடைபந்து மாணவர்கள் காலை, மாலை இருவேளை மாணவர்கள் பயிற்சியில் ஈடுபடுவர். பள்ளி விட்டு மாலை 5:30 மணிக்கு மேல் வரும் மாணவர்கள் சீருடை மாற்றி விளையாட வரும் போது இருட்டாகிறது. முக்கியமான அரங்குகளில் போதுமான வெளிச்சத்தை ஏற்படுத்தினால் மாணவர்கள் இரவு 8:00 மணி வரை விளையாடவோ, பயிற்சி பெறவோ முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி