உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்வாய்களில் துார்வாரும் பணி

கால்வாய்களில் துார்வாரும் பணி

மதுரை; மதுரை மாநகராட்சியின் நுாறு வார்டுகளில் தினமும் ஒரு வார்டை தேர்வு செய்து முக்கிய ரோடு, தெருக்கள், பாலங்கள், ரவுண்டானாவில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாய்க்கால்கள், கால்வாய்கள், நீர்நிலைகளில் துார்வாரும் பணிகள் நடக்கிறது.இதையொட்டி மண்டலம் 2 ல் தல்லாகுளம் உலக தமிழ்ச்சங்கம் ரோட்டில் கரும்பாலை முதல் வக்புவாரிய கல்லுாரி வரையான தண்டலை வாய்க்காலில் 80 மீ.,க்கும், மண்டலம் 4 பகுதி அனுப்பானடி பகுதி சொட்டதட்டி வாய்க்காலில் 25 மீ., தொலைவுக்கும் துார் வாரப்பட்டது. இதுபோன்ற பணிகள் அனைத்து வாய்க்கால்களிலும் நடைபெற உள்ளது என கமிஷனர் சித்ரா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை