உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் இன்று கல்விக்கடன் முகாம்

மதுரையில் இன்று கல்விக்கடன் முகாம்

மதுரை: மதுரை லேடிடோக் கல்லுாரியில் மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம் இன்று (ஆக.,29) காலை 9:00 மணி முதல் நடக்கிறது.மருத்துவம், பொறியியல், இதர தொழில் படிப்புகளுக்கு முறையே தேசிய தகுதித்திறன், நுழைவுத்தேர்வு பொறியியல் கலந்தாய்வு, இதர நுழைவுத் தேர்வு, நேரடியாக கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கும், கலை அறிவியல் கல்லுாரி மாணவருக்கும் வங்கிகள் கல்விக் கடன் வழங்க உள்ளன. மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்குள் இருந்தால், அவர்கள் வாங்கிய கல்விக்கடனில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கடன் கணக்கில் கொள்ளப்பட்டு அதற்கான வட்டி படிக்கும் காலங்களுக்கு முழுமையாக மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை பெற www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.முகாமிற்கு தேவையான ஆவணங்கள் ஆதார், 10, 12ம் வகுப்பு சான்றிதழ்கள்,கவுன்சிலிங் கடிதம், மாற்றுச் சான்றிதழ், கல்லுாரி அட்மிஷன் கடிதம், கல்லுாரி கட்டண விவரம், கல்லுாரியின் அப்ரூவல் சான்று, பான் கார்டு, சாதிச்சான்று, பெற்றோர் ஆண்டு வருமான சான்று, முதல் பட்டதாரி என்ற உறுதிமொழிச்சான்று, கடன்பெறும் வங்கியின் பெயர், முகவரி, வங்கி புத்தகம் ஆகியவற்றுடன் வரவேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி