உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்கம்பங்களில் பற்றியது நெருப்பு

மின்கம்பங்களில் பற்றியது நெருப்பு

திருமங்கலம்: திருமங்கலம் மதுரை ரோடு வெளியூர் பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த மின்கம்பம், தனியார் நெட்வொர்க் கம்பங்களுக்கு கீழே கிடந்த குப்பையில் நேற்று முன்தினம் இரவு சிலர் தீ வைத்தனர்.வேகமாக பரவிய தீ, மின் கம்பம் மற்றும் நெட்வொர்க் கம்பத்தில் சுற்றி வைக்கப்பட்டிருந்த ஒயர்கள், கேபிள்களில் பற்றியது. இதனால் தரையில் இருந்து 15 அடி வரை தீ பயங்கரமாக எரிந்தது.திருமங்கலம் நகர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., க்கள் ஜெயக்குமார், கருணாகரன் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியோடு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை