உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்

நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்

மதுரை : பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தியுள்ளனர்.அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 328 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 29 ஆயிரத்து 774 மாணவர்கள் படிக்கின்றனர். இத்துறை பிரச்னை குறித்து தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா கூறியிருப்பதாவது:இத்துறையில் மொத்தம் 438 ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படாமல் உள்ளன. எனவே தொகுப்பூதிய, பணிநிரவல் ஆசிரியர்கள் மூலம் சமாளிக்கின்றனர். கோடை விடுமுறையில் பணியிடங்களை நிரப்பாததால், பல பள்ளிகளில் ஒரு ஆசிரியர், ஆசிரியரே இல்லாமலும் பள்ளிகள் உள்ளன.இவற்றை நம்பி பயிலும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இப்பள்ளிகளில் ஏழு ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 300 ஆசிரியர்களை முன்னறிவிப்பு இன்றி பணிநிறுத்தம் செய்துள்ளனர்.அவர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்க வேண்டும். துறையின் இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !