ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6650 வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஈமச்சடங்கு நிகழ்வுகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான் பேசினார். மாவட்ட செயலாளர் பூங்கொடி முன்னிலை வகித்தார். தலைவர் கோட்டைச்சாமி, பொருளாளர் செல்லமுத்து, நிர்வாகிகள் மூக்கன், முத்துச்சாமி, சுருளியம்மாள், பரிமளா உட்பட பலர் பங்கேற்றனர்.