உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செயற்குழுகூட்டம்

செயற்குழுகூட்டம்

மேலுார்: மேலுாரில் அனைத்து துறை பணி நிறைவு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் சேவை மைய செயற்குழுக் கூட்டம் தலைவர் தமிழையா தலைமையில் நடந்தது. செயலாளர் கண்ணன் மாதாந்திர அறிக்கை, பொருளாளர் ஆதிசிவன் வரவு செலவு அறிக்கை வாசித்தனர்.ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்படி ரூ.5 லட்சம் வரை, சிறப்பு சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் வரை கட்டணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவது குறித்து செயல் தலைவர் மணி பேசினார். 70-, 80 வயதானவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்க அரசை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகி ஜெயராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை