உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒத்திசை பட்டியலுக்கு ஒப்புதல் எதிர்பார்ப்பு

ஒத்திசை பட்டியலுக்கு ஒப்புதல் எதிர்பார்ப்பு

மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர்கள் கழகத்தின் மதுரை கிளையின் பொதுக்குழுக் கூட்டம் மூட்டா அலுவலகத்தில் நடந்தது. பேராசிரியர் ஜி.ராமமூர்த்தி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். செயலாளர் பெரியதம்பி செயல் அறிக்கையை சமர்ப்பித்தார்.லோக்சபா தேர்தலால் முடங்கிய கோப்புகளுக்கு அரசு உடனடியாக ஒப்புதல் வழங்கி மூத்த குடிமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச் செயலாளர் மனோகரன் பேசுகையில், ''தமிழக அரசிடம் பல ஆண்டுகளா க தொடர்ந்து சமர்ப்பிக்கும், 'ஒத்திசை பட்டியலுக்கு' ஒப்புதல் வழங்கி மூத்த ஆசிரியர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்' என்றார். பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், சுப்ரமணி, செந்தில், விஜயன் ஏற்பாடுகளை செய்தனர். பேராசிரியர் குணவதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி