உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி

மதுரையில் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி

மதுரை : மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் ஜூலை 25, 26 ல் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி அளிக்கப்படுகிறது.எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். வெளிநாட்டு வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளும் முறை, பாதுகாப்பு வழிமுறைகள், இன்சூரன்ஸ், கப்பலில் அனுப்புவதற்கான வழிமுறைகள், விலை நிர்ணயம் பற்றி கற்றுத்தரப்படும்.ஆக. 3, 4ல் நடக்கும் ஜி.எஸ்.டி., பிராக்டிசனர் பயிற்சியில் ஜி.எஸ்.டி., பற்றிய அறிமுகம், வரி விகிதங்கள், ரிஜிஸ்ட்ரேஷன் கற்றுத்தரப்படும். மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் சுயதொழில் தொடங்கலாம். அலைபேசி: 86956 46417.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ