| ADDED : ஆக 13, 2024 06:10 AM
திருப்பரங்குன்றம் : தமிழ்நாடு விவசாய சங்க மதுரை மாவட்ட குழுக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. தலைவர் மகாமுனி தலைமை வகித்தார். மாநில செயலாளர் மாசிலாமணி பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் செல்லவேலு, மாவட்ட செயலாளர் சந்தனம், இ.கம்யூ., செயலாளர் முத்துவேல், ஒன்றிய செயலாளர் விஜயா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் நாகஜோதி கலந்து கொண்டனர்.மதுரையில் அனைத்து கண்மாய்களையும் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நிலையூர் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.