பஸ் இன்ஜினில் தீ
திருமங்கலம் : திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மாலை 6:00 மணிக்கு காரியாபட்டிக்கு அரசு டவுன் பஸ் சென்றது.ஆனந்தா தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கும் போது பஸ் இன்ஜின் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதனால் பயணிகள் அலறியடித்தபடி இறங்கினர். இன்ஜின் மேல் மூடியை திறந்த போது வயர்கள் எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. கடைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.