தீத்தடுப்பு விழிப்புணர்வு
மதுரை: மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன் உத்தரவுபடி அனுப்பாடி மதுரை காந்தி என்.எம்.ஆர்., சுப்புராமன் மகளிர் கல்லுாரி, விரகனுார் மடோனா பெண்கள் கல்லுாரியில் அனுப்பானடி தீயணைப்பு அலுவலர் அசோக் குமார் தலைமையில் பயிற்சி தீத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிலைய அலுவலர் அறிவழகன், சிறப்பு அலுவலர் எஸ். கணேஷ் மற்றும் வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். சோழவந்தான் செக்கானூரணி அரசு பாலிடெக்னிக், விவேகானந்தா கல்லுாரியில் சோழவந்தான் நிலைய அலுவலர் முத்துக்குமரன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.