மேலும் செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் பிப்.10ல் பாலாலயம்
06-Feb-2025
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 18ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணைக் கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்மத் தேவன், சண்முகசுந்தரம், ராமையா, தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.திருவிழா நடக்கும் மார்ச் 20 வரை சுவாமியும், அம்மனும் தினமும் ஒரு வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலிப்பர். திருக்கல்யாணம்
முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 11 இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபாரம் நிகழ்ச்சி, இரவு 8:00 மணிக்கு நக்கீர லீலை, மார்ச் 12ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, மார்ச் 13 காலை கங்காளநாதர், இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நடராஜர், சிவகாமி அம்பாள் புறப்பாடு, மார்ச் 14ல் பச்சைக்குதிரை ஓட்டம், மார்ச் 16ல் சூரசம்ஹார லீலை நடைபெற உள்ளது. மார்ச் 17ல் பட்டாபிஷேகம், மார்ச் 18ல் திருக்கல்யாணம், மார்ச் 19ல் தேரோட்டம், மார்ச் 20ல் தீர்த்த உற்ஸவம் நடைபெறும்.
06-Feb-2025