உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேகதாது அணை விவகாரத்தில் வாய் திறவாத முதல்வர்; முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்

மேகதாது அணை விவகாரத்தில் வாய் திறவாத முதல்வர்; முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்

பாலமேடு : 'மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர், அமைச்சர்கள் யாரும் வாய் திறக்கவில்லை' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.பாலமேட்டில் அ.தி.மு.க., சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் குமார் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:பக்கத்து மாநிலமான கர்நாடகாவிற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இல்லை, இதை கண்டு தமிழக அரசு பொங்கி எழ வேண்டாமா. உங்களால் முடியவில்லை என்றால் ராஜினாமா செய்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமியிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். அவர் மத்திய அரசின் நிதி பெற்று தருவார்.பெண் டி.எஸ்.பி.,யை கும்பலாக தாக்கி உள்ளனர். காக்கிச்சட்டை மீது ரவுடிகளுக்கு பயம் போய்விட்டது. 10ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில் 24 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. வரும் செப்.9ல் வாரிசு அமைச்சருக்கு பட்டாபிஷேகம் மதுரையில் நடக்க உள்ளது. இதில் ஏற்கனவே வழங்கிய பட்டாவை ரத்து செய்து திரும்பவும் வழங்குகிறார்கள்.தமிழகம் வந்த கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் உதயநிதியை சந்தித்த பின் பேட்டியில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு நன்மை என பொய் மூட்டையை அவிழ்த்து விட்டார். இதற்கு அமெரிக்காவில் போட்டோ ஷூட் நடத்தும் முதல்வர், அமைச்சர்கள் வாய் திறக்கவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை