உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோடைகால இலவச பயிற்சி

கோடைகால இலவச பயிற்சி

மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏப்., 15 முதல் இலவச விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால் மற்றும் தடகள விளையாட்டுகளில் பயிற்சி பெற விரும்பும் 6 முதல் பிளஸ் 2 வரையான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். ஏப்., 15 முதல் காலை 6:00 முதல் 8:00 மணி வரையும் மாலை 4:00 முதல் 6:00 மணி வரையும் தொடர்ந்து 21 நாட்களுக்கு பயிற்சி நடக்கும்.பால், முட்டை, பிஸ்கட் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் பெறலாம். விரும்புவோர் நேரில் பெயரை பதிவு செய்யலாம். ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 50 பேர் வரை அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ